பாடல் #7584
ஆ நீதியுள்ள கர்த்தரே
🔤 Aa Neethiyulla Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆ, நீதியுள்ள கர்த்தரே. வயல் வறண்டதாலே எஜ்ஜீவனும் வதங்கிற்றே. இக்கேடு எங்களாலே நடந்த பாவத்தின் பலன் என்றெங்களில் ஒவ்வொருத்தன் துக்கித்துச் சொல்வானாக. 2. ஆ, எங்கள் மீறுதல்களை இரக்கமாய் மன்னியும், நீரே அடியார் நம்பிக்கை. சகாயத்தை அளியும்; கர்த்தாவே, சுத்த தயவால் மழையைத் தந்து, அதினால் நிலத்தைப் பூரிப்பாக்கும். 3. தயாபரா, நீர் உமது நல் வாக்கு நிறைவேற , காய்ந்த பூமிக்குத் தண்ணீர் இறைப்பீராக; ஆகாயத்தின் கர்த்தரே நீரே, மழையை உம்மை அன்றியே யார் பெய்யப் பண்ணக்கூடும். 4. மூச்சற்ற விக்ரகங்களால் ஆகாதே; தேவரீரே பாரத்தை உமது கையால் விரித்தீர்; அதில் நீரே அளவில்லாமல் ஆள்பவர்; நீரே பிதா, நீர் ரட்சகர்; உம்மாலே யாவும் ஆகும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aa, Neethiyulla Karttharae. Vayal Varandathaalae Ejjeevanum Vathangkirrae. Ikkaetu Enggalaalae Natandha Paavatthin Palan Enrenggalil Ovvorutthan Thukkitthuch Solvaanaaga. 2. Aa, Enggal Meerudhalkalai Irakkamaay Manniyum, Neerae Atiyaar Nampikkai. Sakaayatthai Aliyum; Kartthaavae, Suttha Thayavaal Mazhaiyaith Thanthu, Athinaal Nilatthaip Poorippaakkum. 3. Thayaabaraa, Neer Umathu Nal Vaakku Niraivaera , Kaayndha Poomikkuth Thanneer Iraippeeraaga; Aakaayatthin Karttharae Neerae, Mazhaiyai Ummai Anriyae Yaar Peyyap Pannakkootum. 4. Moocchartra Vikrakanggalaal Aakaathae; Thaevareerae Paaratthai Umathu Kaiyaal Virittheer; Athil Neerae Alavillaamal Aalpavar; Neerae Pithaa, Neer Ratsakar; Ummaalae Yaavum Aakum.