பாடல் #7569
அபிஷேகம் பெற்ற
🔤 Apishaegam Pertra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அபிஷேகம் பெற்ற சீஷர் தெய்வ வாக்கைக் கூறினார்; கட்டளை கொடுத்த மீட்பர் "கூட இருப்பேன்," என்றார். 2. இயேசுவே, நீர் சொன்னவண்ணம் ஏழை அடியாருக்கே ஊக்கம் தந்து நல்ல எண்ணம், சித்தியாகச் செய்வீரே. 3. முத்திரிக்கப்பட்ட யாரும் ஆவியால் நிறைந்தோராய் வாக்கைக் கூற வரம் தாரும், அனல் மூட்டும் தயவாய். 4. வாக்குத்தத்தம் நிறைவேற சர்வ தேசத்தார்களும் உந்தன் பாதம் வந்து சேர அனுக்ரகம் செய்திடும். 5. பிதா, சுதன், தூய ஆவி என்னும் தேவரீருக்கே தோத்திரம் புகழ்ச்சி, கீர்த்தி விண் மண்ணில் உண்டாகுமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Apishaegam Pertra Seeshar Theyva Vaakkaik Koorinaar; Kattalai Kotuttha Meetpar "kooda Iruppaen," Enraar. 2. Yesuvae, Neer Sonnavannam Aezhai Atiyaarukkae Ookkam Thanthu Nalla Ennam, Sitthiyaagach Seyveerae. 3. Mutthirikkappatta Yaarum Aaviyaal Nirainthoraay Vaakkaik Koora Varam Thaarum, Anal Moottum Thayavaay. 4. Vaakkutthattham Niraivaera Sarva Thaesatthaarkalum Undhan Paadham Vanthu Saera Anukrakam Seythitum. 5. Pithaa, Sudhan, Thooya Aavi Ennum Thaevareerukkae Thotthiram Pugazhchsi, Keertthi Vin Mannil Untaakumae!