பாடல் #7568
அந்தகாரப் பூமி
🔤 Andhakaarap Poomi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தகாரப் பூமி இதையா - இருளோடி மெய் அவிரொளி உதித்ததையா சிந்தை இருள்மீடிக் கெட்டுச் சந்ததமும் உன்னைவிட்டு நிந்தைகள் இலச்சைப்பட்டு நேசமுற்று மோசம் போன தேசங்கள் கடல்களெங்கும் - உந்தன் வேத சேதியின் பலன்கள் தங்கும் காசினியோர்கட்குப் பொங்கும் அளவில்லாத களிப்புகளுண்டாயிலங்கும் என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம் ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம் - அந்த கஷ்ட நஷ்டங் கொண்டுவாடிக் கணக்கில்லாத கவலைக ளாலுமூடிக் கர்த்தனே உனைமன்றாடிக் கண்ணீராறாய்க் கதறியச் செபித்துத் தேடிச் சத்திய சுவிசேட வித்தினை யிங்குபோட வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும். - அந்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andhakaarap Poomi Ithaiyaa - Iruloti Mey Aviroli Uthitthathaiyaa Sinthai Irulmeetik Kettuch Sandhathamum Unnaivittu Ninthaigal Ilachsaippattu Naesamurru Mosam Pona Thaesanggal Katalkalengkum - Undhan Vaedha Saethiyin Palankal Thangkum Kaasiniyorkatkup Pongkum Alavillaadha Kalippugaluntaayilangkum Endramozhi Yindhakkaalam Unmaiyaachsu Thundhanseelam Aezhaigaluk Kanukoolam Inruvandha Thumakkolam - Andha Kashta Nashtang Kontuvaatik Kanakkillaadha Kavalaiga Laalumootik Kartthanae Unaimanraatik Kanneeraaraayk Kathariyach Sepitthuth Thaetich Satthiya Suvisaeda Vitthinai Yingkupoda Vandhavark Kanpainaada Vandhanam Aiyaa Kaarum. - Andha