பாடல் #7557
கர்த்தர் உன் வீட்டை
🔤 Kartthar Un Veettai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில் அதை கட்டும் உந்தன் பாடு விருதா கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில் உன் கண் விழிப்பும் விருதா ஆதலால்; என் உள்ளமே சதா அவர் சமூகம் நிதம் நேசரையே துதித்திடட்டும் கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால் நீ பாக்கியம் கண்டடைவாய் 2. உன் வழிகளிலெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தங்கள் கரங்களில் ஏந்திடுவார் 3. இரவின் பயங்கரத்துக்கும் பகலில் பறக்கும் அம்புக்கும் இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் நீ பயப்படவே மாட்டாய் 4. சிங்கத்தின் மேலும் நடந்து வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய் அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால் உன்னை விடுவித்து காத்திடுவார் 5. ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும் என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் 6. கர்த்தருக்குப் பயப்பட்டவன் இவ்வித ஆசீர்வாதமும் பெறுவான் கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை கடைசி மட்டும் ஆசீர்வதிப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthar Un Veettai Kattaaraakil Athai Kattum Undhan Paatu Viruthaa Kartthar Nakaratthaik Kaaval Seyyaavitil Un Kan Vizhippum Viruthaa Aadhalaal; En Ullamae Sathaa Avar Samoogam Nidham Naesaraiyae Thuthitthidattum Karttharukku Payanthu Avar Vazhi Natanthaal Nee Paakkiyam Kandataivaay 2. Un Vazhigalilellaam Unnaith Thoodharkal Kaatthituvaar Un Paadham Kallil Idaraadhapati Thanggal Karanggalil Aenthituvaar 3. Iravin Payanggaratthukkum Pakalil Parakkum Ampukkum Irulil Natamaatum Kollai Noykkum Nee Payappatavae Maattaay 4. Singgatthin Maelum Natanthu Valu Sarppatthaiyum Mithippaay Avar Naamatthai Nee Murrum Nampinathaal Unnai Vituvitthu Kaatthituvaar 5. Aabatthilum Avarai Naan Nokkik Kooppitum Vaelaiyilum Ennaith Thappuvitthae Murrum Iratsippaarae En Aatthuma Naesaravar 6. Karttharukkup Payappattavan Ivvidha Aaseervaadhamum Peruvaan Kartthar Seeyonil Irunthu Unnai Kataisi Mattum Aaseervathippaa