பாடல் #7550
என் மீட்பர் கிறிஸ்து
🎙 கிறிஸ்தவ பாடல்
என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்(உயிர்த்தார்) எனக்கென்ன ஆனந்தம் என் மீட்பர் இயேசு உதித்தார்(சாவை ஜெயித்தார்) எனக்கென்ன பேரின்பம் 1. பூலோகமெங்கும் ஓர் செய்தி மேலோகமெங்கும் விண் ஜோதி நரர் வாழ்ந்திடவே பெரும் நீதி நீர் வாரும் மெய் ஜோதி 2. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன் உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன் நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே பரலோக வாழ்வின்றே 3. ஆ! அல்லேலூயா துதி பாடு இன்று அமலன் பிறந்தார் பாரு மோட்ச வாசலை திறந்தார் பாரு எந்நாளும் புகழ் பாடு