பாடல் #7545
என் கண்ணீரைக் காணும்
🎙 கிறிஸ்தவ பாடல்
என் கண்ணீரை காணும் தேவன் என்னை என்றும் நடத்துவார் நான் நம்பின நல்ல தேவன் நன்மையாவும் நல்குவார் 1. என் தேவன் நல்லவர் மாராவை மாற்றிடுவார் மாறாத வாக்குகளை எந்நாளும் காத்திடுவார் 2. என் வாழ்வில் கஷ்டங்கள் எளிமையாய் மாறிடுதே தீராத துன்பங்களை தீராத துன்பங்களை நம் இயேசு நீக்கிடுவார் 3. அந்நாளை கண்டிட என் ஆவி வாஞ்சிக்குதே என் நேசர் ஏற்ற வேளை அன்பாக செய்திடுவார்