பாடல் #7536
அப்பா தயாள குணாநந்த
🔤 Appaa Thayaala Kunaanandha
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா, பொல்லா இப்பாரில் காய்பாமுன் ஏகினீரே, ஏசுநாதா? 1. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடீனாரோ? - அந்தச் செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ? 2. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்தவோ? சுவாமீ - பொறி மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன் னேமி? 3. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே - தீயர் பொய்யான சாட்சி இரட்டையோ, சுமத்தினார் தீதே 4. என் கட்டை நீக்கி ஈடேற்ற வாதைக்குள்ளானீரோ? - உம்மைப் பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங் கொண்டு போனாரோ? 5. இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே, என்றன் கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே? 6. நீர்பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார், தேவே? - பல கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே, கோவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa, Thayaala Kunaanandha Monandha Vaethaa, Pollaa Ippaaril Kaaypaamun Aekineerae, Aesunaathaa? 1. Kurtram Sumatthap Poych Saatsigalaith Thaeteenaaro? - Andhach Sertralar Ellaam Thirantaegamaayk Kootinaaro? 2. Kannam Athaitthatho? Kankal Sivandhavo? Suvaamee - Pori Minnik Kalangki, Visanam Urreero, Nan Naemi? 3. Meyyaana Saatsi Ittaiyanae, Sonna Um Meethae - Theeyar Poyyaana Saatsi Irattaiyo, Sumatthinaar Theethae 4. En Kattai Neekki Eetaertra Vaathaikkullaaneero? - Ummaip Pin Kattaayk Katti, Pilaatthidang Kontu Ponaaro? 5. Itthanai Paatugal Neer Patta Thenkotum Paavamae, Endran Kartthanae, Un Meethil Vandhathaiyo, Thaeva Kobamae? 6. Neerpatta Paattaippol, Aar Pattutthaangkuvaar, Thaevae? - Pala Kaarpatta Nenjjamum Seerpattup Pokumae, Kovae