பாடல் #7527
அன்பின் தேவன் இயேசு
🔤 Anpin Devan Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் தேவன் இயேசு உன்னை இன்றே அழைக்கின்றார் அவர் உன்னை அழைக்கின்றார் உன் துன்பம் துயரம் கவலை நீக்க இன்றே அழைக்கின்றார் உன்னை அழைக்கின்றார் 1. ரத்தம் தோய்ந்த கையை கண்டு சித்தம் தெளியாயோ நித்தமாய் நீ காய்ந்த காலை முத்தம் செய்யாயோ உத்தமர் இயேசு உந்தனுக்காக இத்தனை வாதையோ சத்திய நாதர் சத்தமாய் அழைக்கும் சத்தம் கேளாயோ 2. தீயின் கட்டு உலக மாயை எல்லாம் விரைந்தோடும் நோயின் வாடை பார சுமைகள் சொன்னால் பரந்தோடும் தாயின் பாசம் சேயின் நேசம் ஒருநாள் மறைந்தோடும் ஆயின் வாக்கு மாறா இயேசு அன்போ வழிந்தோடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Devan Yesu Unnai Inrae Azhaikkinraar Avar Unnai Azhaikkinraar Un Thunbam Thuyaram Kavalai Neekka Inrae Azhaikkinraar Unnai Azhaikkinraar 1. Rattham Thoyndha Kaiyai Kantu Sittham Theliyaayo Nitthamaay Nee Kaayndha Kaalai Muttham Seyyaayo Utthamar Yesu Undhanukkaaga Itthanai Vaathaiyo Satthiya Naadhar Satthamaay Azhaikkum Sattham Kaelaayo 2. Theeyin Kattu Ulaka Maayai Ellaam Virainthotum Noyin Vaatai Paara Sumaigal Sonnaal Paranthotum Thaayin Paasam Saeyin Naesam Orunaal Marainthotum Aayin Vaakku Maaraa Yesu Anpo Vazhinthotum