பாடல் #7511
நீர் சொன்னதை செய்பவர்
🔤 Neer Sonnathai Seypavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் சொன்னதை செய்பவர் சொல்லாததை தருபவர் என் தேவைகள் அறிந்தவர் முன்குறித்து வைத்தவர் உமக்கே என் வாழ்க்கையில் முதலிடமே நீரே நான் நம்பும் நல்ல மறைவிடமே எதைக்குறித்தும் கலக்கமில்லை கைவிட நீர் ஒரு மனிதனில்லை யேகோவா நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீர் என்னை நடத்திடுவீர் ஆதரவாய் எனக்கிருந்தீர் என் விளக்கை ஏற்றி வைத்தீர் எபிநேசராய் உடனிருந்தீர் இதுவரை உதவிகள் செய்து வந்தீர் ஏற்ற வேளை எனக்கும் உண்டு காலங்கள் எல்லாம் உந்தன் கரத்தில் உண்டு அமர்ந்திருப்பேன் உம் கரத்தில் உயர்த்திடுவீர் என்னை உன்னதத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Sonnathai Seypavar Sollaadhathai Tharubavar En Thaevaigal Arindhavar Munkuritthu Vaitthavar Umakkae En Vaazhkkaiyil Mudhalidamae Neerae Naan Nampum Nalla Maraividamae Ethaikkuritthum Kalakkamillai Kaivida Neer Oru Manidhanillai Yaekovaa Neer Paartthukkolveer Azhaitthavar Neer Ennai Natatthituveer Aadharavaay Enakkiruntheer En Vilakkai Aerri Vaittheer Epinaesaraay Udaniruntheer Ithuvarai Udhavigal Seythu Vantheer Aertra Vaelai Enakkum Untu Kaalanggal Ellaam Undhan Karatthil Untu Amarnthiruppaen Um Karatthil Uyartthituveer Ennai Unnathatthil