பாடல் #7509
என் இயேசுவே நீர் செய்திட்ட
🔤 En Yesuvae Neer Seythitta
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே நீர் செய்திட்ட எண்ணற்ற நன்மைகளை எண்ணியே எந்நாளும் நன்றியுடனே துதித்துப் போற்றிடுவேன் - ஆஹா 1. கடந்த வாழ் நாளெல்லாம் கருத்தாய் ஆதரித்தீர் கைவிடாதென்றும் தவறாமலென்னை கனிவாய் நடத்தினீர் 2. துன்பப் பெருக்கினாலே துணையாய் நின்றீரல்லோ சிறுமை ஏற்ற நாட்களுக் கீடாய் பெரும் மகிழ்ச்சி ஈந்தீர் 3. வாக்குத் தத்தங்களெல்லாம் நாள்தோறும் நிறைவேற்றி காத்ததால் உம்மை வாழ்த்திடுவேனே நாதனே என்றென்றுமே 4. அழைத்த அழைப்பினில் அசையா பர்வதம் போல நிலையாய் நிற்க உயிர் பெலனாய் நித்யரே விளங்கினீர் 5. இந்த மா நன்மைகட்காய் என்ன பதிற் செய்குவேன் என்னையே உமக்கென்றுமே தந்தேன் ஏற்றுக் கொள்வீர் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Neer Seythitta Ennartra Nanmaigalai Enniyae Ennaalum Nanriyudanae Thuthitthup Porrituvaen - Aahaa 1. Katandha Vaazh Naalellaam Karutthaay Aadharittheer Kaivitaathenrum Thavaraamalennai Kanivaay Natatthineer 2. Thunbap Perukkinaalae Thunaiyaay Ninreerallo Sirumai Aertra Naatkaluk Keetaay Perum Makizhchsi Eentheer 3. Vaakkuth Thatthanggalellaam Naalthorum Niraivaerri Kaatthathaal Ummai Vaazhtthituvaenae Naadhanae Enrenrumae 4. Azhaittha Azhaippinil Asaiyaa Parvatham Pola Nilaiyaay Nirka Uyir Pelanaay Nithyarae Vilangkineer 5. Indha Maa Nanmaigatkaay Enna Pathir Seykuvaen Ennaiyae Umakkenrumae Thanthaen Aerruk Kolveer Yesuvae