பாடல் #7505
எழும்பிடுவாய் ஓ திருச்சபையே
🔤 Ezhumpituvaay O Thirucchapaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பிடுவாய் ஓ திருச்சபையே எழுப்பிடுவாய் ஜெய வீரர்களை பூரண சுவிசேஷ வீரர்களாய் புறப்படட்டும் எங்கும் அணியணியாய் 1. இயேசுவுக்காய் பெரும் சேனை ஒன்றை இந்திய நாட்டில் திரட்டிடுவோம் - நாம் சிலுவைக் கொடி பிடித்தே - அல்லேலூயா சீயோனின் பாதைச் செல்வோம் 2. களைப்பினை மேற்கொள்ள கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தே புது ஆசீர் பெறுவோம் நாம் கழுகினைப் போல் பறந்தே - அல்லேலூயா கர்த்தரின் சேவை செய்வோம் 3. இயேசுவின் பின்னே ஓடிடுவோமே இயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நம் தியாகத்தின் பாதையிலே - அல்லேலூயா தினமும் நடந்திடுவோம் 4. ஆவியினால் எப்பொழுதும் நிறைந்தே ஆவியின் வரங்களை உடையோராய் - நாம் ஆயத்தமாக நிற்போம் - அல்லேலூயா ஆர்ப்பரித்தே மகிழ்வோம் 5. எதிரியின் சேனைக்குள் பாய்ந்தே செல்வோம் எதிரியின் கோட்டைகள் தகர்த்தெறிவோம் - நாம் எதிரியை வீழ்த்திடுவோம் - அல்லேலூயா எழுதின பட்டயத்தால் 6. பாவத்தின் சிறைகளில் வாடிடும் மக்களை பாவத்திலிருந்தே விடுதலை செய்வோம் - நாம் பரிசுத்தர் கூட்டமொன்றை - அல்லேலூயா பரமனுக்காய் சேர்ப்போம் 7. எக்காள சத்தம் தொனித்திடும் எதிர்கொண்டு இயேசு ராஜனை சந்திப்போம் - நாம் மேகத்தில் ஏறிச் செல்வோம் - அல்லேலூயா மேதினியை ஆண்டிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpituvaay O Thirucchapaiyae Ezhuppituvaay Jeya Veerarkalai Poorana Suvisaesha Veerarkalaay Purappatattum Engkum Aniyaniyaay 1. Yesuvukkaay Perum Saenai Onrai Inthiya Naattil Thirattituvom - Naam Siluvaik Koti Pititthae - Allaelooyaa Seeyonin Paathaich Selvom 2. Kalaippinai Maerkolla Karttharin Paadhatthil Kaatthirunthae Puthu Aaseer Peruvom Naam Kazhukinaip Pol Paranthae - Allaelooyaa Karttharin Saevai Seyvom 3. Yesuvin Pinnae Otituvomae Yesuvukkaay Jeevan Vaitthituvomae - Nam Thiyaagatthin Paathaiyilae - Allaelooyaa Thinamum Natanthituvom 4. Aaviyinaal Eppozhuthum Nirainthae Aaviyin Varanggalai Utaiyoraay - Naam Aayatthamaaga Nirpom - Allaelooyaa Aarpparitthae Makizhvom 5. Ethiriyin Saenaikkul Paaynthae Selvom Ethiriyin Kottaigal Thakarttherivom - Naam Ethiriyai Veezhtthituvom - Allaelooyaa Ezhuthina Pattayatthaal 6. Paavatthin Siraigalil Vaatitum Makkalai Paavatthilirunthae Vitudhalai Seyvom - Naam Parisutthar Koottamonrai - Allaelooyaa Paramanukkaay Saerppom 7. Ekkaala Sattham Thonitthitum Ethirkontu Yesu Raajanai Santhippom - Naam Maegatthil Aerich Selvom - Allaelooyaa Maethiniyai Aantida