பாடல் #7492
இராஜாவாய் இயேசு
🔤 Iraajaavaay Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இராஜாவாய் இயேசு தூதர்கள் சூழ மேகமதில் தோன்றும் நாள் வேகமாய் நெருங்கி வந்திடுதே -நாம் ஏகமாய் எழும்புவோம் பரிசுத்தமாக்கப்பட்டோரே ஒன்றாய் பறந்து வந்திடுவீர் பாவமில்லாமலே காத்திடும் நமக்காய் பரன் இயேசு வந்திடுவார் 2. கர்த்தருக்குள்ளே நித்திரையானோர் காகளம் தொனிக்கவே கண்ணிமைப் பொழுதில் கல்லறையில் நின்று வல்லமையாய் வருவார் 3. காயங்கள் கண்டு ஆனந்தத்தாலே கண்ணீர் சொரிந்திடுவோம் காலா காலங்களாய் கல்வாரி நேசத்தை கருத்தாய்ப் பாடிடுவோம் 4. ஜீவ கிரீடம் சூடிடுவோம் ஜீவனை ஊற்றியே நாம் தேவ சித்தமே செய்தோர் பெறவே ஜெயவேந்தனாய் வருவார் 5. இயேசுவுக்காக இகத்தின் இன்ப சுகங்களை வெறுத்தே சிலுவை சுமந்த சுத்தருக்காகவே சீக்கிரம் தோன்றிடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraajaavaay Yesu Thoodharkal Soozha Maegamathil Thonrum Naal Vaegamaay Nerungki Vanthituthae -naam Aegamaay Ezhumpuvom Parisutthamaakkappattorae Onraay Paranthu Vanthituveer Paavamillaamalae Kaatthitum Namakkaay Paran Yesu Vanthituvaar 2. Karttharukkullae Nitthiraiyaanor Kaagalam Thonikkavae Kannimaip Pozhuthil Kallaraiyil Ninru Vallamaiyaay Varuvaar 3. Kaayanggal Kantu Aanandhatthaalae Kanneer Sorinthituvom Kaalaa Kaalanggalaay Kalvaari Naesatthai Karutthaayp Paatituvom 4. Jeeva Kireedam Sootituvom Jeevanai Oorriyae Naam Thaeva Sitthamae Seythor Peravae Jeyavaendhanaay Varuvaar 5. Yesuvukkaaga Igatthin Inba Suganggalai Verutthae Siluvai Sumandha Suttharukkaagavae Seekkiram Thonrituvaar.