பாடல் #7490
இராஜரீக கெம்பீர
🔤 Iraajareega Kempeera
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இராஜரீக கெம்பீரத் தொனியோடே ராஜ ராஜனை தேவ தேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனைக் கூட்டமாகச் சேவிப்போம் மெய்ச் சீஷராக ஏசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் ஏசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 2. சூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம்பாடி ஜெயம் பெற்றுச் செல்கிறார் 3. செங்கடல் நடுவிலே நடத்தினார் எங்கள் ஆண்டவர் சர்வ வல்லவர் கடலைப் பிளந்து நதியைப் பிரித்து காய்ந்து நிற்கும் பூமியில் நடத்துவார் 4. தாவீதை விரட்டிடும் சவுல் கைகள் தளர்ந்திடவே அடங்கிடவே பிலேயாமின் சாபம் பறந்தோடிப்போம் பரிசுத்தவான்களே கெம்பீரிப்போம் 5. பரலோக வாசிகள் சுதேசிகள் பரதேசிகள் சில சீஷர்கள் பின் திரும்பிடாமல் விட்டதைத் தொடாமல் பற்றும் விசுவாசத்தோடு முன் செல்வோம் 6. ஜெயமே எமது அஸ்திபாரமே ஜெபமின்றியே ஜெயமில்லையே ஆவியில் ஜெபிப்போம் அற்புதங்கள் காண்போம் ஆச்சரியமாகவே நடத்துவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Iraajareega Kempeerath Thoniyotae Raaja Raajanai Thaeva Devanai Verriyotu Paati Pakthiyotu Naati Veerasaenaik Koottamaagach Saevippom Meych Seesharaaga Aesuvin Pin Selluvom Murru Mutiya Verriyataiya Sarrum Anjsitaamal Aesu Naamatthil Saatthaanai Thorkatitthu Maerkolvom 2. Soolamitthi Irantu Saenaik Koppaaga Sooriyanaip Pol Santhiranaip Pol Kotigal Parakka Saatsigal Sirakka Keedhampaati Jeyam Perruch Selkiraar 3. Senggatal Natuvilae Natatthinaar Enggal Aandavar Sarva Vallavar Katalaip Pilanthu Nathiyaip Piritthu Kaaynthu Nirkum Poomiyil Natatthuvaar 4. Thaaveethai Virattitum Savul Kaigal Thalarnthidavae Adangkidavae Pilaeyaamin Saabam Paranthotippom Parisutthavaankalae Kempeerippom 5. Paraloga Vaasigal Suthaesigal Parathaesigal Sila Seesharkal Pin Thirumpitaamal Vittathaith Thotaamal Parrum Visuvaasatthotu Mun Selvom 6. Jeyamae Emathu Asthipaaramae Jebaminriyae Jeyamillaiyae Aaviyil Jepippom Arpudhanggal Kaanpom Aacchariyamaagavae Natatthuvaar