பாடல் #749
இயேசு எங்கள் மேய்ப்பர்
🔤 Yesu Enggal Maeyppar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார் மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார் துன்பம் நேரிட்டாலும் இன்பம் ஆயினும் இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும். நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம் காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம் கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார் நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார். ஆட்டுக்காக மேய்ப்பர் இரத்தம் சிந்தினார் அதில் மூழ்கினோரே தூயர் ஆகுவார் பாவ குணம் நீக்கி முற்றும் இரட்சிப்பார் திவ்விய தூய சாயல் ஆக மாற்றுவார். இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார் ஓனாய்கள் வந்தாலும் தொடவே மாட்டார் சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம் பாதாளத்தின்மேலும் ஜெயங்கொள்ளுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Enggal Maeyppar Kanneer Thutaippaar Maarpil Saertthanaitthu Payam Neekkuvaar Thunbam Naerittaalum Inbam Aayinum Yesuvinpin Selvom Paalar Yaavarum. Nalla Maeyppar Sattham Nanraay Arivom Kaathukkinbamaaga Kaettuk Kalippom Kantitthaalum Naesar Aarrith Thaerruvaar Naanggal Pinnae Sella Vazhi Kaattuvaar. Aattukkaaga Maeyppar Rattham Sinthinaar Athil Moozhkinorae Thooyar Aakuvaar Paava Kunam Neekki Murrum Iratsippaar Thivviya Thooya Saayal Aaga Maarruvaar. Yesu Nalla Maeyppar Aattaip Poshippaar Onaaykal Vanthaalum Thodavae Maattaar Saavin Pallatthaakkil Anjjavae Maattom Paathaalatthinmaelum Jeyangkolluvom.