பாடல் #7480
ஆனந்தங் கொள்ளுவேன்
🔤 Aanandhang Kolluvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆனந்தம் கொள்ளுவேன் அன்பர் இயேசுவிலே எந்தன் பாவங்கள் போக்கியதால் அற்புதர் இயேசுவை என்றும் துதித்திடுவோம் எந்தன் ஜீவியம் மாற்றியதால் நான் புகழ்ந்திடுவேன் அவர் நாமமதை நன்றி நிறைந்த இதயமுடன் ஆயட் காலமெல்லாம் துதி பாடிடுவேன் நன்றி மறவா நல் மனதுடனே 2. இத்தனை அற்புத நன்மைகள் செய்தவர் இன்னமும் எம்மைக் காத்திடுவார் அத்தனை நாட்களும் எம்மை நடத்திடவே கர்த்தர் இயேசுவே முன் செல்கின்றார் 3. சோர்ந்திடும் வேளைகள் எம்மை தேற்றிடவே ஈந்தவர் தேவ ஆவி எம்மில் நேர்ந்திடும் துன்ப துயரமாம் வேளைகளில் நேசர் கிருபைகள் அளித்திடுவார் 4. கூப்பிடும் வேளைகள் நேச கொடி அசைத்தே வேகமாய் வந்தே பதிலளித்தார் தப்பிடும் வழிகள் எந்தன் ஆபத்தினில் வேத வசனத்தால் நடத்திடுவார் 5. பற்பல சோதனை எம்மை சூழ்ந்திட்டதால் நற்பலன் வாழ்வில் பரிசுத்தமே சீயோனை எமக்காய் கட்டி வெளிப்படுவார் சேர்வேன் தரிசிக்க தூய முகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aanandham Kolluvaen Anbar Yesuvilae Endhan Paavanggal Pokkiyathaal Arpudhar Yesuvai Enrum Thuthitthituvom Endhan Jeeviyam Maarriyathaal Naan Pugazhnthituvaen Avar Naamamathai Nanri Niraindha Idhayamudan Aayat Kaalamellaam Thuthi Paatituvaen Nanri Maravaa Nal Manathudanae 2. Itthanai Arpudha Nanmaigal Seythavar Innamum Emmaik Kaatthituvaar Atthanai Naatkalum Emmai Natatthidavae Kartthar Yesuvae Mun Selkinraar 3. Sornthitum Vaelaigal Emmai Thaerridavae Eendhavar Thaeva Aavi Emmil Naernthitum Thunba Thuyaramaam Vaelaigalil Naesar Kirupaigal Alitthituvaar 4. Kooppitum Vaelaigal Naesa Koti Asaitthae Vaegamaay Vanthae Pathilalitthaar Thappitum Vazhigal Endhan Aabatthinil Vaedha Vasanatthaal Natatthituvaar 5. Parpala Sodhanai Emmai Soozhnthittathaal Narpalan Vaazhvil Parisutthamae Seeyonai Emakkaay Katti Velippatuvaar Saervaen Tharisikka Thooya Mugam