பாடல் #7473
அழகினிலே சிறந்தவர்
🎙 கிறிஸ்தவ பாடல்
அழகினிலே சிறந்தவர் நீர் அன்பு நிறைந்தவர் நீர் அலைகள் மோதும் எனது வாழ்வில் அமைதி ஈந்தவர் நீர் 1. இகத்திலே என் இதயம் கவர்ந்த இதய தெய்வம் நீர் இன்னல் மேவும் துன்ப நேரம் இன்பம் ஈந்தவர் நீர் 2. பாவி எந்தன் பாவம் தீர்க்க பாரில் பிறந்தவர் நீர் பாவி எனக்காய் கோர குருசில் பாடு சகித்தவர் நீர் 3. மாயை தனிலே மறந்து உம்மை நான் மாளும் நேரமதே மாற்றினிர் என் மனதை இறைவா மாநின் கிருபை யிதே 4. என்னை மீட்க எனது சாயல் எடுத்த இறைவனே நீர் என்னை உமது சாயல் தனிலே என்றும் மாற்றிடுவீர் 5. உலகில் உன் சிலுவையே என் உள்ளம் உருக்கிடுதே உன்னதா நின் சிலுவைதனையே உயர்த்துவேன் பூவிலே