பாடல் #7470
அன்பர் இயேசுவிலே
🔤 Anbar Yesuvilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பர் இயேசுவிலே தினம் ஆனந்திப்போம் அகமகிழ்ந்தே நாம் பாடிடுவோம் 1. ஊற்றிடுவீர் புது கிருபைகளை உள்ளம் கனிந்தும்மை துதித்திடுவோம் இப்புவி வேதனை நீங்கிடுமே இளைப்பாறிடுவேன் உம்மில் 2. பாரத்தால் நிறைந்து நீ தவித்திடாதே உன் பாரங்கள் சுமப்பேன் என்றனரே விடுதலை பெற்று நான் பாடிடவே பரலோக சிந்தையால் நிறைத்திடுமே 3. ஆதி அப்போஸ்தல உபதேசத்தில் அடியாரை முற்றுமாய் காத்திடுமே தேவ மகிமையின் சாயலாகி தேவனோடென்றும் வாழ்ந்திடவே 4. ஜெயத்தின் மேல் ஜெயம் பாடிடுவேன் ஜெய வீரனாய் முன்னோடினீரே ஜெயம் பெற்ற சுத்தருடன் நாமும் சீர் பெற்று ஆளுவோம் சீயோனில் 5. தேவ எக்காளம் முழங்கிடவே மகிமை மேல் மகிமை அடைந்திடுவோம் மறுரூப சாயலாய் பறந்திடுவோம் மகிமையின் முகத்தை நாம் தரிசிக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anbar Yesuvilae Thinam Aananthippom Agamakizhnthae Naam Paatituvom 1. Oorrituveer Puthu Kirupaigalai Ullam Kaninthummai Thuthitthituvom Ippuvi Vaedhanai Neengkitumae Ilaippaarituvaen Ummil 2. Paaratthaal Nirainthu Nee Thavitthitaathae Un Paaranggal Sumappaen Endranarae Vitudhalai Perru Naan Paatidavae Paraloga Sinthaiyaal Niraitthitumae 3. Aathi Apposthala Ubathaesatthil Atiyaarai Murrumaay Kaatthitumae Thaeva Makimaiyin Saayalaaki Devanotenrum Vaazhnthidavae 4. Jeyatthin Mael Jeyam Paatituvaen Jeya Veeranaay Munnotineerae Jeyam Pertra Suttharudan Naamum Seer Perru Aaluvom Seeyonil 5. Thaeva Ekkaalam Muzhangkidavae Makimai Mael Makimai Atainthituvom Marurooba Saayalaay Paranthituvom Makimaiyin Mugatthai Naam Tharisikkavae