பாடல் #7467
ஏற்ற நேரம் எனக்கு
🎙 கிறிஸ்தவ பாடல்
ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை - 2 2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை தனித்து நின்றபோது உதவி செய்த கிருபை 3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை 4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை கதறி அழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை