பாடல் #7457
மலைமா நதியோ
🔤 Malaimaa Nathiyo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைமா நதியோ மிகு ஆழ் கடலோ மருள் சூழும் கானக வனமோ - எங்கும் மீட்பர் சிலுவை சுமப்பேனே 1. பள்ளம் மேடு தடை தாண்டியே பசாசின் கண்ணிக்கு நீங்கியே உள்ளார்வமுடன் விண் பார்வையுடன் - நான் மெள்ள மெள்ள நடந்தே எனின் மீட்பர் சிலுவை சுமப்பேனே 2. இன்னல் துயர் பிணி வாதையில் ஈனரெனைத் தாக்கும் வேளையில் துன்பம் களைந்தே துயரம் ஒழிந்தே - நான் தூயன் பாதையில் ஊர்ந்தே அவர் தூயச் சிலுவை சுமப்பேனே 3. பூலோக மேன்மை நாடிடேன் புவிமேவும் செல்வம் தேடிடேன் சீலன் சிலுவை சிறியேன் மேன்மை - என் ஜீவன் வழி மறை இயேசுவே - அவர் ஜீவ சிலுவை சுமப்பேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaimaa Nathiyo Miku Aazh Katalo Marul Soozhum Kaanaka Vanamo - Engkum Meetpar Siluvai Sumappaenae 1. Pallam Maetu Thatai Thaantiyae Pasaasin Kannikku Neengkiyae Ullaarvamudan Vin Paarvaiyudan - Naan Mella Mella Natanthae Enin Meetpar Siluvai Sumappaenae 2. Innal Thuyar Pini Vaathaiyil Eenarenaith Thaakkum Vaelaiyil Thunbam Kalainthae Thuyaram Ozhinthae - Naan Thooyan Paathaiyil Oornthae Avar Thooyach Siluvai Sumappaenae 3. Poologa Maenmai Naatitaen Puvimaevum Selvam Thaetitaen Seelan Siluvai Siriyaen Maenmai - En Jeevan Vazhi Marai Yesuvae - Avar Jeeva Siluvai Sumappaenae