பாடல் #7438
இயேசுவே உம்மைத் தியானித்தால்
🔤 Yesuvae Ummaith Thiyaanitthaal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே; கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே. 2. மானிட மீட்பர் இயேசுவின் சீர் நாமம் போலவே, இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? 3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவீர்; நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவீர். 4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவீர் எந்நன்மையும்; கண்டடைந்தோரின் பாக்கிய சீர் யார் சொல்ல முடியும்? 5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்; அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார். 6. இயேசுவே, எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே; இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Ummai Thiyaanitthaal Ullam Kaniyumae; Kannaara Ummaik Kaanungkaal Paramaanandhamae. 2. Maanida Meetpar Yesuvin Seer Naamam Polavae, In Keedha Naadham Aaynthitin Unto Ippaarilae? 3. Neer Norungkunda Nenjsukku Nampikkai Aakuveer; Neer Saandhamulla Maandharkku Santhosham Eekuveer. 4. Kaetporkkum Thaetuvorkkum Neer Eeveer Ennanmaiyum; Kandatainthorin Paakkiya Seer Yaar Solla Mutiyum? 5. Yesuvin Anpai Unarnthu Mey Pakthar Arivaar; Avvanpin Aazham Alanthu Marror Arinthitaar. 6. Yesuvae, Enggal Mukthiyum Paerinbamum Neerae; Ippothum Nitthiya Kaalamum Neer Enggal Maatsiyae.