பாடல் #7435
ஆத்மமே உன் ஆண்டவரின்
🔤 Aathmamae Un Aandavarin
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலூயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலூயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலூயா, இன்னும் அவர் அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே, நாற்றிசையும் நின்றெழுத்து பணிவர் நீர் பக்தரே; அல்லேலூயா, அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aathmamae, Un Aandavarin Thiruppaadham Paninthu, Meetpu, Sugam, Jeevan, Arul Pertrathaalae Thuthitthu, Allaelooyaa, Enrenraikkum Nitthiya Naadharaipporru. 2. Nam Pithaakkal Thaazhvil Pertra Thayai Nanmaikkaay Thuthi; Kobangkontum Arul Eeyum Enrum Maaraathor Thuthi; Allaelooyaa, Avar Unmai Maa Makimaiyaam Thuthi. 3. Thanthai Pol Maa Thayai Ullor; Neesa Mannor Nammaiyae Anpin Karam Kontu Thaangki Maarraar Veezhtthik Kaappaarae! Allaelooyaa, Innum Avar Arul Virivaanathae. 4. Enrum Nindravar Samugam Porrum Thoodhar Koottamae, Naarrisaiyum Ninrezhutthu Panivar Neer Paktharae; Allaelooyaa, Anaivorum Anpin Theyvam Porrumae.