பாடல் #7419
வாசல்களே தலைகளை
🔤 Vaasalkalae Thalaigalai
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் அநாதி கதவுகளே விலகியே நில்லுங்கள் ஏன்? இராஜா வருகிறார், யார்? இயேசு ராஜா வருகிறார் 1. அலைகளெல்லாம் அவர்முன் அடங்கி நிற்கின்றது உங்கள் தலைகளெல்லாம் அவர்முன் பணிந்து நிற்கட்டும் -(2) குடைகளெல்லாம் அவர்முன் சுருட்டப்படட்டும் மனித மகுடமெல்லாம் தரையில் குனிந்து வைக்கட்டும் 2. அவருக்கு ஆணையிட உலகில் மனிதர் இல்லை அவருக்கு தடைவிதிக்க உலகில் நாவுகள் இல்லை -(2) மனித பெருமையெல்லாம் ஒருநாள் மண்ணில் முடிவடையும் பணியா தலைகளெல்லாம் ஒருநாள் தங்களைத் தான் அடிக்கும் 3. அவர் வரும்நாள் இன்னும் அதிக தூரம் இல்லை அந்தோ உயிர்த்தெழும் நாள் மிகவும் சமீபமாயிற்றே -(2) எரிநரகம் அல்லது என்றும் நித்தியம் மனிதர் இறுதி பங்கு இதுவே தேவ சத்தியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaasalkalae Thalaigalai Uyartthunggal Anaathi Kathavugalae Vilakiyae Nillunggal Aen? Iraajaa Varukiraar, Yaar? Yesu Raajaa Varukiraar 1. Alaigalellaam Avarmun Adangki Nirkindrathu Unggal Thalaigalellaam Avarmun Paninthu Nirkattum -(2) Kutaigalellaam Avarmun Suruttappatattum Manidha Makudamellaam Tharaiyil Kuninthu Vaikkattum 2. Avarukku Aanaiyida Ulakil Manidhar Illai Avarukku Thataivithikka Ulakil Naavugal Illai -(2) Manidha Perumaiyellaam Orunaal Mannil Mutivataiyum Paniyaa Thalaigalellaam Orunaal Thanggalaith Thaan Atikkum 3. Avar Varumnaal Innum Athiga Thooram Illai Antho Uyirtthezhum Naal Migavum Sameebamaayirrae -(2) Erinarakam Allathu Enrum Nitthiyam Manidhar Iruthi Pangku Ithuvae Thaeva Satthiyam