பாடல் #7416
யாருக்காய் வாழ்கிறாய் நீ?
🔤 Yaarukkaay Vaazhkiraay Nee?
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருக்காய் வாழ்கிறாய் நீ? இந்த வையகம் தனிலே நீ வாழ்ந்திடும் நாட்களெல்லாம் யாருக்காய் வாழ்கிறாய் நீ? 1. மாமிச ஆசையில் சிக்கலுண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே சிற்றின்பப் பிரியராய் வாழ்வாருண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர் நாளெல்லாம் தீழ்ப்பான நோக்கம் கொண்டோர் - 2 இவர் வாழ்வெல்லாம் பாவமும் சாபமுமே 2. பணம் பணம் என்றிடும் பலருமுண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே மனமெல்லாம் செல்வத்தைச் சேர்த்திடவே இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர் மூச்செல்லாம் ஆஸ்திக்காய் அலறி நிற்கும் - 2 ஆனால் வாழ்வெல்லாம் வறட்சியும் தாழ்ச்சியுமே 3. கொள்கைக்காய் வாழ்பவர் பலருமுண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே வீண் பெருமைக்கு விலையாகிப் போனார் உண்டு இந்தப் புவியினிலே இந்தப் புவியினிலே - இவர் நாளெல்லாம் விரிவில்லா மனதுடையோர் - 2 இவர் வாழ்வெல்லாம் சாதனை இழந்து நிற்போர் 4. உடைபட்ட அப்பமாய் திகழ்வாருண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே கரைந்திடும் உப்பாய் நிற்பாருண்டு இந்தப் புவியினிலே, இந்தப் புவியினிலே - இவர் நாளெல்லாம் இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் - 2 வெறும் கூப்பிடும் சத்தமாய் பணிபுரிவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarukkaay Vaazhkiraay Nee? Indha Vaiyakam Thanilae Nee Vaazhnthitum Naatkalellaam Yaarukkaay Vaazhkiraay Nee? 1. Maamisa Aasaiyil Sikkaluntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae Sirrinbap Piriyaraay Vaazhvaaruntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae - Ivar Naalellaam Theezhppaana Nokkam Kontor - 2 Ivar Vaazhvellaam Paavamum Saabamumae 2. Panam Panam Enritum Palarumuntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae Manamellaam Selvatthaich Saertthidavae Indhap Puviyinilae, Indhap Puviyinilae - Ivar Moochsellaam Aasthikkaay Alari Nirkum - 2 Aanaal Vaazhvellaam Varatsiyum Thaazhchsiyumae 3. Kolkaikkaay Vaazhpavar Palarumuntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae Veen Perumaikku Vilaiyaakip Ponaar Untu Indhap Puviyinilae Indhap Puviyinilae - Ivar Naalellaam Virivillaa Manathutaiyor - 2 Ivar Vaazhvellaam Saadhanai Izhanthu Nirpor 4. Utaibatta Appamaay Thigazhvaaruntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae Karainthitum Uppaay Nirpaaruntu Indhap Puviyinilae, Indhap Puviyinilae - Ivar Naalellaam Yesuvukkaay Marainthu Nirpaar - 2 Verum Kooppitum Satthamaay Panipurivaar