பாடல் #7411
நாம் ஒருமித்து
🔤 Naam Orumitthu
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால் நம் நடுவில் இயேசு நிற்பாரே - (2) - அப்போது இருபதில் இருபதற்கு மேல் எப்படி நம் நடுவில் இயேசு நிற்பதால் - எப்படி நம் நடுவில் இயேசு நிற்பதால் 1. போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள் எதுவும் எங்கும் இல்லை சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம் என்பது யாரிலும் இல்லை - (2) பழைய மனுஷன் இல்லை நம்மில் பாவ சுபாவமே இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம் 2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற பிரிவினை நம்மில் இல்லை அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம் என்பார் யாருமே இல்லை - (2) சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில் வடக்கு தெற்கும் இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம் 3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர் என்ற தத்துவம் இல்லை இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற வித்தியாசம் இல்லை - (2) அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை அடித்துச் செல்லுதல் உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம் 4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும் பணிவிடை ஆவியே உண்டு ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும் சேவை உள்ளமே உண்டு - (2) தலைக்கணமே இல்லை நம்மில் இடைவெளியே இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம் 5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும் வந்து இரங்குதல் உண்டு அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம் சபையிலும் தளத்திலும் உண்டு - (2) பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும் விடுதலை ஆவியே உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம் 6. ஏழு நதியிலும் இரவும் பகலும் திரு முழுக்குகள் உண்டு சீரும் சிறப்பும் பெற்று மகிழும் பாரதம் ஓர்நாள் உண்டு - (2) சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும் நீதி நியாயமே உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Orumitthu Vaazhvom Enraal Nam Natuvil Yesu Nirpaarae - (2) - Appothu Irubathil Irubatharku Mael Eppati Nam Natuvil Yesu Nirpathaal - Eppati Nam Natuvil Yesu Nirpathaal 1. Pottigal Poraamaigal Kasappugal Sathigal Ethuvum Engkum Illai Siriyavan Periyavan Pathavigal Athikaaram Enbathu Yaarilum Illai - (2) Pazhaiya Manushan Illai Nammil Paava Supaavamae Illai - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam 2. Kaepaa, Appallo, Pavul Endra Pirivinai Nammil Illai Avarkal Koottam Ivarkal Koottam Enpaar Yaarumae Illai - (2) Sapaigal Sthaabanam Illai Nammil Vatakku Therkum Illai - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam 3. Uyarndha Kulatthor Thaazhndha Kulatthor Endra Thatthuvam Illai Irantu Tamlar Irantu Varisai Endra Vitthiyaasam Illai - (2) Anpin Vellam Untu Avaigalai Atitthuch Selludhal Untu - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam 4. Oruvar Kaalkalai Oruvar Kazhuvum Panivitai Aaviyae Untu Oruvar Paaratthai Oruvar Sumakkum Saevai Ullamae Untu - (2) Thalaikkanamae Illai Nammil Itaiveliyae Illai - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam 5. Aaviyin Vallamai Anaivar Thalaiyilum Vanthu Irangkudhal Untu Arpudham Ataiyaalam Aacchariyam Athisayam Sapaiyilum Thalatthilum Untu - (2) Paeykal Otudhal Untu Engkum Vitudhalai Aaviyae Untu - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam 6. Aezhu Nathiyilum Iravum Pakalum Thiru Muzhukkugal Untu Seerum Sirappum Perru Makizhum Paaratham Ornaal Untu - (2) Sattam Ozhungku Untu Engkum Neethi Niyaayamae Untu - Aen? Nam Natuvil Yesu Nirpathaal -aen? Nam Natuvil Yesu Nirpathaal - Naam