பாடல் #7409
தேவ உலகின் வேந்தரே
🔤 Thaeva Ulakin Vaendharae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ உலகின் வேந்தரே தேவையுள்ள இடம் வந்தீரோ ஏழையைப் பார்த்திட வேளையும் வந்ததோ பாலைவனம் இனி சோலையோ 1. கண்ணாடி மாளிகை விட்டோடிப் பீடிகை மட்டாக வந்தவா எங்கள் பாலா கண்ணீர் சொரியும் மண்ணின் மடியில் குடிகொள்ள எண்ணமோ, இயேசுபாலா - (2) 2. பெத்லேகேம் ஊரினில், சத்திரம் ஒன்றினில் நட்சத்திரம் வந்து நிற்பதேன்? ராஜாதி ராஜன், கர்த்தாதி கர்த்தன் மானிட வடிவாய்ப் பிறந்ததால் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Ulakin Vaendharae Thaevaiyulla Idam Vantheero Aezhaiyaip Paartthida Vaelaiyum Vandhatho Paalaivanam Ini Solaiyo 1. Kannaati Maalikai Vittotip Peetikai Mattaaga Vandhavaa Enggal Paalaa Kanneer Soriyum Mannin Matiyil Kutikolla Ennamo, Yesupaalaa - (2) 2. Pethlaekaem Oorinil, Satthiram Onrinil Natsatthiram Vanthu Nirpathaen? Raajaathi Raajan, Kartthaathi Kartthan Maanida Vativaayp Pirandhathaal - (2)