பாடல் #7407
சின்ன சின்ன பிள்ளை
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
சின்ன சின்ன பிள்ளை என்று நினைக்காதீங்க - இது சொன்னபடி நீங்களும் நடக்கணுங்க - (2) எட்டுத்திசை இருப்பவரும் ஓடி வாருங்க - நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) - சின்ன 1.ஏரோது இராஜாவாயிருக்கலாமுங்க -இவர் சர்வலோக ராஜாவாம் தெரிஞ்சிக்கிடுங்க பார்வோனின் சேனையெல்லாம் முங்கிப் போச்சுங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) 2.யூத மதத் தலைவரென்று நினைக்காதீங்க - உங்கள் மதங்களுக்கு ஜீவ நாடி இவர்தானுங்க உப்பு இல்லா உபதேசங்கள் தேவைதானாங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2) 3.படிப்பு, பவுசு, ஜாதி, நாடு பார்க்காதீங்க - இந்த பிள்ளை முன்னால் எல்லாம் சமம் தெரிஞ்சிக்கிடுங்க புதிய ஒரு சமுதாயம் பிறக்கப் போகுதுங்க நம்மை வாழவைக்கும் பிள்ளையிது கண்டுகொள்ளுங்க - (2)