பாடல் #7404
கூடிச் சேருவீர்
🔤 Kootich Saeruveer
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர் உள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2 கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2) 1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும் உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2 துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும் அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் 2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார் விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2 அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார் கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? 3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும் மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2 தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும் இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kootich Saeruveer Onraagath Thaetich Selluveer Ullatthil Yesuvinpaal Anpukontor Yaarum Kootuveer - 2 Kalvaarikkarukil Kootuveer - (2) 1. Siruvar Natuvar Muthuvar Yaarum Saernthu Koodattum Ullam Mattum Oru Ennatthaal Porunthi Nirkattum - 2 Thuthiyin Keedham Ezhumba Onraayp Paatich Sellattum Andhakaara Sakthi Yaavum Asainthu Ozhiyattum 2. Kalvaarik Karukil Vanthor Anpaal Niraivaar Vigarpa Minri Evaridamum Seeraayp Pazhakuvaar - 2 Anpu Nerukki Aeva Avar Saevai Seykuvaar Kalvaariyil Anpai Anri Yaathu Kaanuvaay? 3. Yesuvai Ariyaar Ulakil Nilavum Naalmattum Mishanarigal’ Endra Vaartthaip Paesappatattum - 2 Thiyaagam Purivaar Maelum Maelum Ezhumpi Varattum Yesuvin Ullam Adhanaal Poorippaagattum