பாடல் #7402
காணக்கூடாத என் தங்கம்
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
காணக் கூடாத என் தங்கம் அல்லோ காடு மேடுமாகச் செல்ல அல்லோ காணாத ஆட்டினைத் தேடி அல்லோ என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ... ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3) தூங்கு பாலா தூங்கு நீ ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ நீ எந்நாளும் இன்பமல்லோ