பாடல் #7401
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
🔤 Kartthar Thaamae Kartthar Thaamae
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே நம் பட்சத்தில் நிற்பதால் சத்ரு வெள்ளம்போல் வந்தாலும் பத்திரமாய் நிற்கின்றோம் நம்மை நம்பி, பிறரை நம்பி நாம் நடந்தால் விம்முவோம் கர்த்தர் தாமே கர்த்தர் தாமே துணைக்கு நின்றால் வெல்லுவோம் மனித வாழ்க்கை கண்ணீர் என்பார் உலகில் அநேகர் உண்டல்லோ கர்த்தரின் துணை அறியார் கூறும் மன வருத்தம் அதுவல்லோ துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள் எதுவென்றாலும் வெல்லுவோம் கர்த்தர் தாமே கர்த்தர் தாமே துணைக்கு நின்றால் வெல்லுவோம் இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர் இனிமேலும் உன்னை நடத்தாரோ கர்த்தரில் நீ மனம் பதித்து நிதம் நடந்தால் நடத்தாரோ மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள் வியாதி, தோல்வி வந்தாலும் கர்த்தர் தாமே கர்த்தர் தாமே துணைக்கு நின்றால் வெல்லுவோம் என் உள்ளத்தில் என் உள்ளத்தில் வாசம் செய்யும் கர்த்தாவே இயேசுவில் நான் நேசம் கொண்டு வளரச் செய்யும் கர்த்தாவே கறைகள் இன்றி, குறைகள் இன்றி உலகை கடக்கச் செய்திடும் கர்த்தர் தாமே கர்த்தர் தாமே துணைக்கு நின்றால் வெல்லுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Thaamae Kartthar Thaamae Nam Patsatthil Nirpathaal Sathru Vellampol Vanthaalum Patthiramaay Nirkinrom Nammai Nampi, Pirarai Nampi Naam Natanthaal Vimmuvom Kartthar Thaamae Kartthar Thaamae Thunaikku Ninraal Velluvom Manidha Vaazhkkai Kanneer Enpaar Ulakil Anaegar Undallo Karttharin Thunai Ariyaar Koorum Mana Varuttham Athuvallo Thunbam, Thukkam, Soozhchsi, Sathigal Ethuvenraalum Velluvom Kartthar Thaamae Kartthar Thaamae Thunaikku Ninraal Velluvom Immattumaay Natatthum Kartthar Inimaelum Unnai Natatthaaro Karttharil Nee Manam Pathitthu Nidham Natanthaal Natatthaaro Mana Kashtanggal, Pana Kashtanggal Viyaathi, Tholvi Vanthaalum Kartthar Thaamae Kartthar Thaamae Thunaikku Ninraal Velluvom En Ullatthil En Ullatthil Vaasam Seyyum Kartthaavae Yesuvil Naan Naesam Kontu Valarach Seyyum Kartthaavae Karaigal Inri, Kuraigal Inri Ulakai Katakkach Seythitum Kartthar Thaamae Kartthar Thaamae Thunaikku Ninraal Velluvom