பாடல் #7398
என்னென்று சொல்வேன்
🔤 Ennenru Solvaen
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன் கர்த்தாவின் பேரன்பை விட்டு - (2) நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2) கர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும் கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2) நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2) கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு - என்னென்று மண்ணில் பிறந்து மண்ணோடு போகும் மனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2) மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2) என்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி உலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2) பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2) ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ இயேசுவின் அன்பை போல் உண்டோ - (2) முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2) அனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennenru Solvaen, Engku Naan Selvaen Kartthaavin Paeranpai Vittu - (2) Naan Pertra Anpu Etthanai Athigam - (2) Kartthaavin Inaiyartra Anpu - Ennenru Kaalaiyum Maalaiyum Karutthinil Nirkum Kartthaavin Oppartra Anpu-(2) Ninaivilum Kanavilum Neengkaathu Nirkum - (2) Kartthaavin Oppartra Anpu - Ennenru Mannil Piranthu Mannotu Pokum Manidharkku Aen Indha Anpu - (2) Mathippirku Uriyor, Makimaikku Uriyor - (2) Enbathae Kartthaavin Theerppu - Ennenru Paarvonin Atimaigal Kandathor Verri Ulakatthin Manidharkal Perraar - (2) Paavatthil Verri Maranatthil Verri - (2) Aerpavar Anaivarkkum Verri - Ennenru Anpirku Aengkum Ullanggal Unto Yesuvin Anpai Pol Unto - (2) Mugampaartthu Alla Agam Paarkkum Anpu - (2) Anaivarkkum Uritthaana Anpu - Ennenru