பாடல் #7390
அழைப்பின் சத்தம்
🔤 Azhaippin Sattham
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைப்பின் சத்தம் தொனிக்கும் நேரம் வாருங்கள் சேருங்கள் (2) அழைக்கப்பட்டவர் அதிகம் அதிகம் கீழ்ப்படிந்தவர் கொஞ்சம் கொஞ்சம் 1. அறுப்பு மிகுதி ஊழியர் கொஞ்சம் எஜமான் நம்மை ஜெபிக்கவே அழைக்கிறார் (2) தானியேல் போன்ற முழங்கால் தேவை கண்ணீர் கலந்த ஜெபங்கள் தேவை 2. எழுபது பேரை அழைத்த கர்த்தர் உன்னையும் என்னையும் அழைக்கிறார் அன்றோ (2) பர்னபா, பவுலைப் புறப்பட அழைத்தார் அவர்களின் சபையை அனுப்பிட அழைத்தார் 3. காற்றைக் கவனிப்பார் விதைப்பதும் இல்லை மேகத்தைப் பார்ப்பவர் அறுப்பதும் இல்லை (2) வலைகளை எறியும் விசுவாசம் தேவை சபைகளைக் கட்டும் தரிசனம் தேவை 4. விளைந்த பயிர்களை அறுத்திடும் நேரம் இணைந்து ஊழியர் உழைத்திடும் நேரம் (2) இயேசுவின் வருகை நெருங்கிடும் நேரம் உலகத்தின் முடிவு வந்திடும் நேரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaippin Sattham Thonikkum Naeram Vaarunggal Saerunggal (2) Azhaikkappattavar Athigam Athigam Keezhppatindhavar Konjjam Konjjam 1. Aruppu Mikuthi Oozhiyar Konjjam Ejamaan Nammai Jepikkavae Azhaikkiraar (2) Thaaniyael Pondra Muzhangkaal Thaevai Kanneer Kalandha Jebanggal Thaevai 2. Ezhubathu Paerai Azhaittha Kartthar Unnaiyum Ennaiyum Azhaikkiraar Anro (2) Parnapaa, Pavulaip Purappata Azhaitthaar Avarkalin Sapaiyai Anuppida Azhaitthaar 3. Kaarraik Kavanippaar Vithaippathum Illai Maegatthaip Paarppavar Aruppathum Illai (2) Valaigalai Eriyum Visuvaasam Thaevai Sapaigalaik Kattum Tharisanam Thaevai 4. Vilaindha Payirkalai Arutthitum Naeram Inainthu Oozhiyar Uzhaitthitum Naeram (2) Yesuvin Varukai Nerungkitum Naeram Ulakatthin Mutivu Vanthitum Naeram