பாடல் #7388
அழைக்கிறார் நீ ஓடிவா
🔤 Azhaikkiraar Nee Otivaa
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா - 2 2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே - ஓடிவா 3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே - ஓடிவா 4. ஒருமுறை அன்பை ருசித்துமே விழுந்துபோன நீ எழும்பிவா பலமுறை துரோகம் செய்ததால் இயேசுவின் கண்ணீர் துடைக்கவா - ஓடிவா 5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா - ஓடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Anpin Uruvam Aandavar Azhaikkiraar Nee Arukil Vaa Thoynthupona Un Vaazhvinai Kaetkiraar Nee Arukil Vaa Otivaa Nee Otivaa Kankalangkiyae Neeyae Vaa Thooramaay Nirkum Unnaitthaan Azhaikkiraar Nee Arukil Vaa - 2 2. Manidhar Palarai Nampinaay Palamurai Thatumaarinaay Urraar Perraar Anpellaam Kanavu Ponru Agalumae - Otivaa 3. Nanpar Palarum Iruppinum Naatum Anpaip Perraayo Selvam Ellaam Maaykaiyae Ulakam Kaanal Neeraamae - Otivaa 4. Orumurai Anpai Rusitthumae Vizhunthupona Nee Ezhumpivaa Palamurai Thurogam Seythathaal Yesuvin Kanneer Thutaikkavaa - Otivaa 5. Innum Nonthu Povaanaen Inrae Arukil Otivaa Ullam Kumurum Unnaiyae Thallaen Enraar Otivaa - Otivaa