பாடல் #7387
இந்தியர் யார்? இந்தியர் யார்?
🔤 Inthiyar Yaar? Inthiyar Yaar?
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியர் யார்? இந்தியர் யார்? இந்தியர் யார்? இந்தியர் யார்? - (2) 1. ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் போராட்டம், வன்முறைக்கு உட்படாதவர் தேசத்தின் வளர்ச்சிகளை கெடுக்காதவர் அரசாங்க சட்டங்களை மீறாதவர் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) 2. பலவந்தம் செய்து மதம் மாற்றமாட்டார் ஏமாற்றி கொள்கைகளை விற்கமாட்டார் பிறரின் உரிமைகளை தடுக்கமாட்டார் தேசத்தின் நல் எண்ணம் ஓங்கச் செய்வார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) 3. தேசத்தின் உடைமைகளை களவுசெய்யார் கருப்பு பணங்களை ஏற்கமாட்டார் கொள்ளை அடித்து குவிக்கமாட்டார் வரிகளில் வஞ்சம் செய்யமாட்டார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) 4. குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்வார் குறிப்பிட்ட கடமையில் தவறமாட்டார் லஞ்சம் எதுவும் வாங்கமாட்டார் சிபாரிசு, செல்வாக்கு நோக்கமாட்டார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) 5. சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பார் சாலை விதிகளை கடைப்பிடிப்பார் ஒளித்தும் மறைத்தும் ஒன்றும் செய்யமாட்டார் உண்மை பிரஜையாக செயல்படுவார் அவரே உண்மை இந்தியர்கள் உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2) 6. ஏழைகள், அகதிகள் நலம் தேடுவார் தான தர்மங்களில் பங்கெடுப்பார் விலங்குகள், பறவைகள் பாதுகாப்பார் தன்னைப்போல் பிறருக்கும் அன்பே செய்வார் அவரே உண்மை இந்தியர்கள்! உள்ளத்தில் தேச பக்தி கொண்டவர்கள்! - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyar Yaar? Inthiyar Yaar? Inthiyar Yaar? Inthiyar Yaar? - (2) 1. Jaathi Mathanggalukku Appaarpattavar Poraattam, Vanmuraikku Utpataadhavar Thaesatthin Valarchsigalai Ketukkaadhavar Arasaangga Sattanggalai Meeraadhavar Avarae Unmai Inthiyarkal Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2) 2. Palavandham Seythu Matham Maartramaattaar Aemaarri Kolkaigalai Virkamaattaar Pirarin Urimaigalai Thatukkamaattaar Thaesatthin Nal Ennam Onggach Seyvaar Avarae Unmai Inthiyarkal Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2) 3. Thaesatthin Utaimaigalai Kalavuseyyaar Karuppu Pananggalai Aerkamaattaar Kollai Atitthu Kuvikkamaattaar Varigalil Vanjjam Seyyamaattaar Avarae Unmai Inthiyarkal Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2) 4. Kurittha Naeratthil Vaelaikkuch Selvaar Kurippitta Katamaiyil Thavaramaattaar Lanjjam Ethuvum Vaanggamaattaar Sipaarisu, Selvaakku Nokkamaattaar Avarae Unmai Inthiyarkal Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2) 5. Suttham Sukaathaaram Paathukaappaar Saalai Vithigalai Kataippitippaar Olitthum Maraitthum Onrum Seyyamaattaar Unmai Pirajaiyaaga Seyalpatuvaar Avarae Unmai Inthiyarkal Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2) 6. Aezhaigal, Agathigal Nalam Thaetuvaar Thaana Tharmanggalil Pangketuppaar Vilangkugal, Paravaigal Paathukaappaar Thannaippol Pirarukkum Anpae Seyvaar Avarae Unmai Inthiyarkal! Ullatthil Thaesa Pakthi Kondavarkal! - (2)