பாடல் #7386
வாழ்க வாழ்க பாரத தேசம்
🔤 Vaazhka Vaazhka Paaratha Thaesam
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்க வாழ்க பாரத தேசம் வாழ்க வாழ்க பாரத தேசம் - (2) 1. கட்சி கொடிகள் பல பல வகையாம் தேசக் கொடியை காக்கவே அவையாம் - (2) பாரத தேசம் சுதந்தர தேசம் எத்தனை சலுகை! எத்தனை உரிமை! 2. நாவின் மொழிகள் பல பல உண்டு உள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ - (2) அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே ஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே 3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம் அனைத்து இந்தியர் சமமென வேண்டும் - (2) ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்போம் விட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம் 4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர் நாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் - (2) அவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு சிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம் 5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம் வன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் - (2) கடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை என்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம் 6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம் மதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் - (2) சிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம் அன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம் 7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே அனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் - (2) அதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhka Vaazhka Paaratha Thaesam Vaazhka Vaazhka Paaratha Thaesam - (2) 1. Katsi Kotigal Pala Pala Vakaiyaam Thaesak Kotiyai Kaakkavae Avaiyaam - (2) Paaratha Thaesam Sudhandhara Thaesam Etthanai Salukai! Etthanai Urimai! 2. Naavin Mozhigal Pala Pala Untu Ullatthil Anaivarum Inthiyarallo - (2) Anpenum Mozhiyil Anaivarum Onrae Orrumai, Aikkiyam Uyarvirku Nanrae 3. Neero, Payiro Namathena Vaentaam Anaitthu Inthiyar Samamena Vaentum - (2) Oruvarukkoruvar Udhaviyaay Iruppom Vittu Naam Kotuppom, Virainthu Valaruvom 4. Uzhavar, Thozhilaalar, Veerar, Aasiriyar Naattin Naanku Thoonkal Endrarivom - (2) Avarkalin Vaazhvu Anaivarin Vaazhvu Sirappum Sezhippum Kankalaal Kaanpom 5. Lanjjam, Vari Aeyppu, Vaelai Niruttham Vanmurai Anaitthum Agarriyae Vaazhvom - (2) Katatthal Thozhilillai, Pothai Porulillai Enroru Naalvara Theermaanam Etuppom 6. Jaathi, Matham Endra Suvarkalai Thakarppom Mathamalla, Manidhanae Mukkiyam Arivom - (2) Siruvar, Ilainjar Ethirkaalam Kaappom Anpenum Kayirril Thaaykkoti Kaanpom 7. Anaivarkkum Sama Anpu Arulum Pithaavae Anaitthilum Thaay Poomi Sezhitthidach Seyyum - (2) Adharku Enggal Pangkai Seythidach Seyyum Yesuvin Naamatthil Jepikkirom Pithaavae