பாடல் #7329
சிந்தனைப் படாதே நெஞ்சமே
🔤 Sindhanaip Pataathae Nenjjamae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிந்தனைப் படாதே நெஞ்சமே உனை ரெட்சித்த தேவ சுதனிருக் கிறார் அந்தியுஞ் சந்தியுமாக யார் பகை செய்தாலு மென்ன எந்த வினை வந்தும் மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே 1.ஐந்து சிட்டு இரண்டு காச தாக விற்றும் அங்கதி லொன் றுந் தரையிலே விழாதென் றுத் தமனுரைத் திருக்கப் புந்தியில் விசாரமுடன் போக்கிட மற்றவர் போல சந்தகத் தினாலுழன்று தவித்துத் தவித்துக் கொண்டு 2. சோங்கிலுயர் சீடரின் முன் பாங்குடன் தய வளித்துத் தாங்கினோன் உனையும் வந்து தாங்குவானென்ன வந்தாலும் ஓங்குமி சராவேல் ராசன் தூங்கவு மில்லையோ சும்மா ஏங்கி யேங்கிச் சஞ்சலங் கொண் டே மாந்தே மாந்து நின்று 3. என்ன பொசிப்போம் குடிப்போம் என்ன உடுப்போ மெனவே பன்ன விசாரங்கள் கோடி பண்ணிலும் எண்ணத் தினாலே உன்னளவுக் கதிக மோர் முளத்தையுண்டாக்க நீயார் அன்னைவயிற்றிற் சமைத்த ஆண்டவன் செத்துப்போனானோ 4. எத்திசையினும் அடர்ந்த சத்துருவெல்லாஞ் செயங்கொண் டத்தனின் வலத்தினித்திய துத்தியத் திருந்தரசாள் கர்த்தனாங் கிறிஸ்து நாதர் சித்தமதல்லாமல் வீணில் தத்தி விழுந்தென்னவரும் பித்தது பித்தது கொண்டு 5. திக்கெல்லாம் புகழுமேக சக்கராதிபனுக்கன்பாகத் தக்கணத் தேவ சகாயன் சற்குணத்துதித்த சேயன் முக்கிய வேதநாயகன் நற்கலைப்பதஞ் சொல் வாயுன் துக்க சஞ்சலங்க ளோடும் எக்கரும முங்கைகூடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sindhanaip Pataathae Nenjjamae Unai Retsittha Thaeva Sudhaniruk Kiraar Anthiyunj Santhiyumaaga Yaar Pakai Seythaalu Menna Endha Vinai Vanthum Mayir Ennap Pattirukkaiyilae 1.ainthu Sittu Irantu Kaasa Thaaga Virrum Anggathi Lon Run Tharaiyilae Vizhaathen Ruth Thamanuraith Thirukkap Punthiyil Visaaramudan Pokkida Martravar Pola Sandhakath Thinaaluzhanru Thavitthuth Thavitthuk Kontu 2. Songkiluyar Seedarin Mun Paangkudan Thaya Valitthuth Thaangkinon Unaiyum Vanthu Thaangkuvaanenna Vanthaalum Ongkumi Saraavael Raasan Thoonggavu Millaiyo Summaa Aengki Yaengkich Sanjjalang Kon Tae Maanthae Maanthu Ninru 3. Enna Posippom Kutippom Enna Utuppo Menavae Panna Visaaranggal Koti Pannilum Ennath Thinaalae Unnalavuk Kathiga Mor Mulatthaiyuntaakka Neeyaar Annaivayirrir Samaittha Aandavan Setthupponaano 4. Etthisaiyinum Adarndha Satthuruvellaanj Seyangkon Tatthanin Valatthinitthiya Thutthiyath Thirundharasaal Kartthanaang Kiristhu Naadhar Sitthamathallaamal Veenil Thatthi Vizhunthennavarum Pitthathu Pitthathu Kontu 5. Thikkellaam Pugazhumaega Sakkaraathibanukkanpaagath Thakkanath Thaeva Sakaayan Sarkunatthuthittha Saeyan Mukkiya Vaedhanaayakan Narkalaippathanj Sol Vaayun Thukka Sanjjalangga Lotum Ekkaruma Mungkaikootum