பாடல் #7303
பரதேசியாக
🔤 Parathaesiyaaga
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரதேசியாக நாம் வாழும் உலகில் சொந்தமென்று ஒன்றும் இல்லையே நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை அந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் – இங்கே கூடாரவாசிகள் நாம் நித்திய நகரம் நோக்கியே செல்லும் நித்திய வாசிகள் நாம் – அங்கே நிரந்தர வாசிகள் நாம் தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம் நம்மோடு வருவதில்லை நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும் இளமையும் மாயை அழகும் மாயை பெயர் புகழும் மாயை அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம் இயேசுவை பின் தொடர்வோம் நித்திய வீட்டின் அன்பான அழைப்பு வரும்வேளை நாம் அறியோம் பரலோக சிந்தை என்றும் மாறாமல் பாடியே பயணம் செய்வோம் மாறாத தெய்வம் மறையாத தெய்வம் இயேசுவை கண்முன் வைப்போம் மறுகரை சேரும் நாள் வரும் வரையில் மங்காமல் ஜொலித்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parathaesiyaaga Naam Vaazhum Ulakil Sondhamenru Onrum Illaiyae Nilaiyaanathonrum Ippoovil Illai Anniyaraay Selvom Kootaaravaasigal Naam – Ingkae Kootaaravaasigal Naam Nitthiya Nakaram Nokkiyae Sellum Nitthiya Vaasigal Naam – Angkae Nirandhara Vaasigal Naam Thaetitthaeti Saerttha Selvanggal Ellaam Nammotu Varuvathillai Nampi Naati Nindra Naesanggal Ellaam Nammai Vittu Otivitum Ilamaiyum Maayai Azhakum Maayai Peyar Pugazhum Maayai Anuthina Siluvai Aarvamaay Sumappom Yesuvai Pin Thodarvom Nitthiya Veettin Anpaana Azhaippu Varumvaelai Naam Ariyom Paraloga Sinthai Enrum Maaraamal Paatiyae Payanam Seyvom Maaraadha Theyvam Maraiyaadha Theyvam Yesuvai Kanmun Vaippom Marugarai Saerum Naal Varum Varaiyil Mangkaamal Jolitthituvom