பாடல் #7297
என் ஜீவ நாட்களெல்லாம்
🔤 En Jeeva Naatkalellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவ நாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா காரிருள் சூழ்கையில் ஒளியாக நீர் வந்தீர் ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னை கைவிடவில்லை ஐயா ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர் கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர் எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் திசை மாறி நான் அலைந்தபோது திருத்திட இறங்கி வந்தீர் சோதனையோ வேதனையோ இயேசுவே உம்மைத் துதிப்பேன் இதுவரையில் நடத்திவந்தீர் இனிமேலும் நடத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeeva Naatkalellaam Enrum Ummai Saarnthiruppaen Naan Nampuvaen Nampuvaen Ummai Mattumae En Vaazhvin Nampikkaiyae Neerthaanaiyaa Kaarirul Soozhkaiyil Oliyaaga Neer Vantheer Jenippitthavar Neerthaanaiyaa – Ennai Kaividavillai Aiyaa Aadharittheer Aravanaittheer Um Tholil Ennai Sumantheer Kanninmanipol Kaatthuk Konteer Ennillaadha Nanmaigal Seytheer Thisai Maari Naan Alaindhapothu Thirutthida Irangki Vantheer Sodhanaiyo Vaedhanaiyo Yesuvae Ummaith Thuthippaen Ithuvaraiyil Natatthivantheer Inimaelum Natatthituveer