பாடல் #7294
உன்னதமானவரே உறைவிடமானவரே
🔤 Unnathamaanavarae Uraividamaanavarae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவரே உறைவிடமானவரே உமக்கே எங்கள் ஆராதனை கர்த்தாவே உம்மை தேடுவோருக்கு நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால் வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே சூழ்ந்து காக்கும் கேடகமே தாங்கி நடத்தும் நங்கூரமே குடும்பமாய் உம்மை போற்றிப் புகழ்வோம் கர்த்தாவே உம்மையே சார்ந்து கொள்வோம் வாதைகள் எங்களை அணுகிடாது பொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது வழிகளிலெல்லாம் எங்களைக் காத்திட பரலோக தூதர்கள் தந்தீரையா ஆபத்துக் காலத்தில் அடைக்கலமே அண்டிவந்தோரின் ஆதரவே இயேசுவே உம் நாமம் என்றென்றும் எங்கள் ஆத்தும வாஞ்சையே சங்கீதமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarae Uraividamaanavarae Umakkae Enggal Aaraadhanai Kartthaavae Ummai Thaetuvorukku Nanmaigal Onrum Kuraivubataathu Muzhu Ullatthotu Ummai Naesitthaal Vaazhvellaam Vitudhalai Vitudhalaiyae Soozhnthu Kaakkum Kaedakamae Thaangki Natatthum Nangkooramae Kutumbamaay Ummai Porrip Pugazhvom Kartthaavae Ummaiyae Saarnthu Kolvom Vaathaigal Enggalai Anukitaathu Pollaappu Orupothum Naeritaathu Vazhigalilellaam Enggalaik Kaatthida Paraloga Thoodharkal Thantheeraiyaa Aabatthuk Kaalatthil Ataikkalamae Antivanthorin Aadharavae Yesuvae Um Naamam Enrenrum Enggal Aatthuma Vaanjsaiyae Sangkeedhamae