பாடல் #7281
சேனைகளின் கர்த்தாவே
🔤 Saenaigalin Kartthaavae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தாவே உம் தூய வாசஸ்தலம் எவ்வளவு அருமையானது எவ்வளவு இனிமையானது வாஞ்சையெல்லாம் நீர்தானையா வாழ்க்கையெல்லாம் நீர்தானையா உள்ளங்கள் தேடிடுதே – எங்கள் உதடுகள் போற்றிடுதே நன்றியுடன் உம்மை துதித்திடவே ஆர்வமுடன் ஓடிவந்தோம் மகிழ்வுடன் ஆராதனை – எங்கள் தேவனே உமக்கு தந்தோம் கண்ணீர்களின் பள்ளத்தாக்கை கடந்து வந்தோம் கிருபையினால் துதிகளை ஏறெடுத்தோம் – எங்கள் இதயத்தில் பெலனடைந்தோம் ஆலயத்தின் சம்பூரணம் ஆண்டவரே உம் பிரசன்னம் தெய்வீக உணவு தந்தீர் – தேவ நதியால் தாகம் தீர்த்தீர் எதிரிகளின் கண்களின் முன் எங்களுக்கோர் விருந்து செய்தீர் ஆனந்த தைலத்தினால் – உள்ளம் நிரம்பியே வழியச் செய்தீர் புத்தியுள்ள ஆராதனை பக்தியுடன் செய்திடுவோம் பரலோக மகிமைதனை – எங்கள் நடுவினில் கண்டிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthaavae Um Thooya Vaasasthalam Evvalavu Arumaiyaanathu Evvalavu Inimaiyaanathu Vaanjsaiyellaam Neerthaanaiyaa Vaazhkkaiyellaam Neerthaanaiyaa Ullanggal Thaetituthae – Enggal Udhatugal Porrituthae Nanriyudan Ummai Thuthitthidavae Aarvamudan Otivanthom Makizhvudan Aaraadhanai – Enggal Devanae Umakku Thanthom Kanneerkalin Pallatthaakkai Katanthu Vanthom Kirupaiyinaal Thuthigalai Aeretutthom – Enggal Idhayatthil Pelanatainthom Aalayatthin Sampooranam Aandavarae Um Pirasannam Theyveega Unavu Thantheer – Thaeva Nathiyaal Thaagam Theerttheer Ethirigalin Kankalin Mun Enggalukkor Virunthu Seytheer Aanandha Thailatthinaal – Ullam Nirampiyae Vazhiyach Seytheer Putthiyulla Aaraadhanai Pakthiyudan Seythituvom Paraloga Makimaidhanai – Enggal Natuvinil Kantituvom