பாடல் #7275
பார்போற்றும் வேந்தன்
🔤 Paarporrum Vaendhan
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை பாரெங்கும் சொல்லிட புறப்படு பாழான ஸ்தலங்கள் யாவையும் ராஜாவின் அரண்மனையாக்கிடு எழும்பிடு வாலிபனே எழும்பிடு கன்னிகையே தேசத்தை கலக்கிடும் காலமிது அக்கினியாய் எழும்பிடும் நேரமிது இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட அக்கினியாக புறப்படு பாவ சாபங்கள் யாவும் நீக்கிட வல்லமையாக எழும்பிடு வல்லமை உனக்குள்ளே தேவ அக்கினி உனக்குள்ளே எழும்பிடு எழும்பிடு வாலிபனே [கன்னிகையே] தேவ சேவை உன்னை அழைக்கிறது காடு மேடுகள் சிதறி அலைந்திடும் மாந்தரை மீட்டிட புறப்படு கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட இரத்த சாட்சியாய் எழும்பிடு அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின் நாமம் உயர்த்திட புறப்படு ஆதி எழுப்புதல் தேசம் [சபைகள்] கண்டிட தரிசனத்தோடு எழும்பிடு பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை பாரெங்கும் சொல்லிட புறப்படுவோம் பாழான ஸ்தலங்கள் யாவையும் இராஜாவின் அரண்மனையாக்கிடுவோம் எழும்புவோம் திருச்சபையே செல்லுவோம் சேனைகளாய் தேசத்தை கலக்கிடும் காலமிது அக்கினியாய் எழும்பிடும் நேரமிது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarporrum Vaendhan Nam Yesuvai Paarengkum Sollida Purappatu Paazhaana Sthalanggal Yaavaiyum Raajaavin Aranmanaiyaakkitu Ezhumpitu Vaalibanae Ezhumpitu Kannikaiyae Thaesatthai Kalakkitum Kaalamithu Akkiniyaay Ezhumpitum Naeramithu Irunda Ulakinai Velicchamaakkida Akkiniyaaga Purappatu Paava Saabanggal Yaavum Neekkida Vallamaiyaaga Ezhumpitu Vallamai Unakkullae Thaeva Akkini Unakkullae Ezhumpitu Ezhumpitu Vaalibanae [kannikaiyae] Thaeva Saevai Unnai Azhaikkirathu Kaatu Maetugal Sidhari Alainthitum Maandharai Meettida Purappatu Kartthar Yesuvin Anpai Sollida Rattha Saatsiyaay Ezhumpitu Akilam Engkilum Aandavar Yesuvin Naamam Uyartthida Purappatu Aathi Ezhuppudhal Thaesam [sapaigal] Kantida Tharisanatthotu Ezhumpitu Paarporrum Vaendhan Nam Yesuvai Paarengkum Sollida Purappatuvom Paazhaana Sthalanggal Yaavaiyum Iraajaavin Aranmanaiyaakkituvom Ezhumpuvom Thirucchapaiyae Selluvom Saenaigalaay Thaesatthai Kalakkitum Kaalamithu Akkiniyaay Ezhumpitum Naeramithu