பாடல் #7271
உம்மைப் பாட என் சிறு
🔤 Ummaip Paada En Siru
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பாட என் சிறு நாவு போதுமோ உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் பல கோடி நன்மைகள் செய்தீரையா இயேசையா இயேசையா பலகோடி நன்மைகள் செய்தீரையா உம் வார்த்தையால் என்னை உயிர்ப்பிக்கின்றீர் நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் உம் சாயலாய் என்னை உருவாக்கினீர் இயேசையா இயேசையா உம் சாயலாய் என்னை உருவாக்கினீர் உம்மைப் போல பூவில் யாரும் இல்லை உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் என்மனம் கவர்ந்த மன்னவர் நீர் இயேசையா இயேசையா என்மனம் கவர்ந்த மன்னவர் நீர் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர் கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் இது வரைக்கும் நடத்தி வந்தீர் இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர் இயேசையா இயேசையா இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paada En Siru Naavu Pothumo Um Pugazh Solla En Arpa Aayul Pothumo Pirathi Palan Aethum Ennidatthil Ethirpaaraamal Pala Koti Nanmaigal Seytheeraiyaa Yesaiyaa Yesaiyaa Palakoti Nanmaigal Seytheeraiyaa Um Vaartthaiyaal Ennai Uyirppikkinreer Neer Paazhaana En Vaazhvai Puthuppikkinreer Kalai Pitungkineer Kilai Narukkineer Um Saayalaay Ennai Uruvaakkineer Yesaiyaa Yesaiyaa Um Saayalaay Ennai Uruvaakkineer Ummaip Pola Poovil Yaarum Illai Umakkoppaanavar Ingkae Evarum Illai Akilatthirkum Aandavar Neer Enmanam Kavarndha Mannavar Neer Yesaiyaa Yesaiyaa Enmanam Kavarndha Mannavar Neer Ullangkaiyil Ennai Varainthu Vaittheer Kan Urangkaamal Thinam Ennai Kaatthu Vantheer Ithu Varaikkum Natatthi Vantheer Inimaelum Thunaiyaay Neer Iruppeer Yesaiyaa Yesaiyaa Inimaelum Thunaiyaay Neer Iruppeer