பாடல் #7267
அழைத்தவர் நீர்தானைய்யா
🔤 Azhaitthavar Neerthaanaiyyaa
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைத்தவர் நீர் தானைய்யா – என்னை அறிந்தவர் நீர்தானைய்யா இதுவரை உமக்காக ஒடிட பெலன் தந்தீர் இன்னமும் உமக்காக உண்மையாய் ஓடச் செய்வீர் உண்மையுள்ளவன் என்று நம்பினீர் உமது ஊழியம் கரங்களில் தந்தீர் கனமான உம் சேவையை கவனமாய் நானும் செய்திட நாள்தோறும் கிருபை தாருமே நிந்தனைகளோ போராட்டங்களோ எதையும் தாங்குவேன் – உமது கிருபையால் எதுவும் என்னை பிரிப்பதில்லையே எதுவும் என்னை அசைப்பதில்லையே இயேசுவே உம்மை நோக்குவேன் பொன்னும் பொருளும் என் நாட்டம் இல்லப்பா பெயரும் புகழும் என் தேடல் இல்லப்பா அழிந்து போகும் ஆத்துமாக்களை திரளாக தாருமைய்யா எழுப்புதலை காணச் செய்யுமே பரம அழைத்தலின் பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கியே தொடர்ந்து ஓடுவேன் விண்மகிமை காணும் வரை அனல் கொண்ட உள்ளத்தோடே அயராமல் ஓடச் செய்யுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaitthavar Neer Thaanaiyyaa – Ennai Arindhavar Neerthaanaiyyaa Ithuvarai Umakkaaga Otida Pelan Thantheer Innamum Umakkaaga Unmaiyaay Odach Seyveer Unmaiyullavan Enru Nampineer Umathu Oozhiyam Karanggalil Thantheer Kanamaana Um Saevaiyai Kavanamaay Naanum Seythida Naalthorum Kirupai Thaarumae Nindhanaigalo Poraattanggalo Ethaiyum Thaangkuvaen – Umathu Kirupaiyaal Ethuvum Ennai Pirippathillaiyae Ethuvum Ennai Asaippathillaiyae Yesuvae Ummai Nokkuvaen Ponnum Porulum En Naattam Illappaa Peyarum Pugazhum En Thaedal Illappaa Azhinthu Pokum Aatthumaakkalai Thiralaaga Thaarumaiyyaa Ezhuppudhalai Kaanach Seyyumae Parama Azhaitthalin Pandhayap Porulukkaay Ilakkai Nokkiyae Thodarnthu Otuvaen Vinmakimai Kaanum Varai Anal Konda Ullatthotae Ayaraamal Odach Seyyumae