பாடல் #7252
உண்மையுள்ள ஊழியனாய்
🔤 Unmaiyulla Oozhiyanaay
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையுள்ள ஊழியனாய் உமக்காக உழைத்திடுவேன் (வாழ்ந்திடுவேன்) எஜமானனே உம் விருப்பம் எந்த நாளும் செய்திடுவேன் நேசிக்கிறேன் முழுஉள்ளத்தோடு உம்மை வாஞ்சிக்கிறேன் உம் தூய சமூகத்தையே வாழ்வேன் உமக்காகவே என் ஜீவன் நாளெல்லாம் எதைக் குறித்தும் கலங்கிடவே மாட்டேன் என் ஜீவனை ஒருபோதும் நேசித்திடேன் உழைப்பேன் உமக்காகவே என் ஜீவன் மடியும் வரை மாண்டழியும் மாந்தரை மீட்டிடவே இதயத்திலே உம் பாரம் தாருமையா என் தேசம் உம்மை காணனும் இயேசய்யா மனமிரங்கும் புகழ்பெருமை ஒருநாளும் வேண்டாமைய்யா உம் புகழை பறைசாற்ற வேண்டுமய்யா சொல்வேன் உந்தன் அன்பை என் ஜீவன் உள்ளவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyulla Oozhiyanaay Umakkaaga Uzhaitthituvaen (vaazhnthituvaen) Ejamaananae Um Viruppam Endha Naalum Seythituvaen Naesikkiraen Muzhuullatthotu Ummai Vaanjsikkiraen Um Thooya Samoogatthaiyae Vaazhvaen Umakkaagavae En Jeevan Naalellaam Ethaik Kuritthum Kalangkidavae Maattaen En Jeevanai Orupothum Naesitthitaen Uzhaippaen Umakkaagavae En Jeevan Matiyum Varai Maandazhiyum Maandharai Meettidavae Idhayatthilae Um Paaram Thaarumaiyaa En Thaesam Ummai Kaananum Yesayyaa Manamirangkum Pugazhperumai Orunaalum Vaentaamaiyyaa Um Pugazhai Paraisaartra Vaentumayyaa Solvaen Undhan Anpai En Jeevan Ullavarai