பாடல் #7248
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் நீர் பரிசுத்தர் உம்மை ஆராதனை செய்கின்றோம் ஆவியோடும் உண்மையோடும் கேருபீன்கள் சேராபீன்கள் ஆராதிக்கும் தூயரே சிங்காசனம் வீற்றிருக்கும் சர்வ வல்ல ராஜானே அக்கினியால் தொட்டுவிடும் எங்களின் உள்ளத்தையே இதயத்தை உம் சமூகத்தில் ஊற்றியே போற்றுவோம் வெண்பனிபோல் தூய்மையாக்கும் ராஜா உந்தன் பிரசன்னத்தால் இன்னும் இன்னும் உம் அருகில் சேர்ந்திட வாஞ்சிக்கிறோம் உம் பணியை செய்திடவே முற்றிலுமாய் அர்ப்பணித்தோம் உலகெங்கும் சொல்லிடுவோம் இயேசுவின் அன்பினையே