பாடல் #7247
என் முழுஇதயம் எந்நாளும்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
என் முழுஇதயம் எந்நாளும் உம்மைப்பாடும் என் நெஞ்சம் உம்மை என்றும் நேசிக்கும் சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்த அன்பே உம்மைப் பாடுவேன் என்றும் பாடுவேன் நல்லவர் நீரே வல்லவர் நீரே காண்பவர் நீரே என்னை காப்பவர் நீரே அப்பா உந்தன் அன்பால் என்னைக் கண்டீரையா உம்மைப் பாடுவேன் என்றும் பாடுவேன் எந்தன் உள்ளம் வந்தீர் உந்தன் ஜீவன் தந்தீர் உம்மைப் பாடுவேன் என்றும் பாடுவேன் எத்தனை எத்தனை நன்மைகள் எந்தன் வாழ்வில் செய்தீர் நன்றி நன்றி ஐயா எந்தன் இயேசைய்யா