பாடல் #7246
பந்தயப் பொருள்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
பந்தயப் பொருள் பெற்றுக் கொள்ள ஓடிடு பாரமான யாவையும் தள்ளிடு தூய்மையான வாழ்வை நாடிடு சாத்தானின் சதிகளை வென்றிடு மாரநாதா அல்லேலூயா இயேசு ராஜா வேகம் வருகிறார் அந்தகார கிரியைகள் அகற்றிடு ஒளி நிறைந்த வாழ்வு வாழ்ந்திடு ஆவியிலே அனலாக ஜொலித்திடு அழியாத ஜீவன் பெற்றிடு புத்தியுள்ள கன்னிகைப்போல் எப்போதும் ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு மணவாளன் இயேசு வருகிறார் மகிழ்வுடனே சந்திக்கப் புறப்படு அழிந்துபோகும் மாந்தரை நினைத்திடு அழியாத சுவிஷேசம் சொல்லிடு உன்னதரின் சேவை செய்ய புறப்படு பரலோகில் பலனுண்டு மகிழ்ந்திடு