பாடல் #7240
என் வாழ்க்கை முழுவதுமே
🔤 En Vaazhkkai Muzhuvathumae
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்க்கை முழுவதுமே உம்மை வாழ்த்தியே வணங்கிடுவேன் என் உயிரினும் மேலானது உமது பேரன்பு என்ன நடந்தாலும் எது நடந்தாலும் எப்போதும் துதித்திடுவேன் குறை சொல்வதில்லை புலம்புவதில்லை நிறைவாய் நன்றி சொல்வேன் நீர் தந்த வாழ்வை ஸ்தோத்திரத்தோடு உள்ளத்தில் ஏற்றுக் கொண்டேன் தெய்வீக அமைதி இதயத்தில் தந்தீர் இன்னும் உம்மை துதித்திடுவேன் சகலமும் செய்ய வல்லவர் நீரே சார்ந்து கொண்டேன் உம்மையே நடப்பது எல்லாம் நன்மைக்குத்தானே இயேசுவே நீர் போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhkkai Muzhuvathumae Ummai Vaazhtthiyae Vanangkituvaen En Uyirinum Maelaanathu Umathu Paeranpu Enna Natanthaalum Ethu Natanthaalum Eppothum Thuthitthituvaen Kurai Solvathillai Pulampuvathillai Niraivaay Nanri Solvaen Neer Thandha Vaazhvai Sthotthiratthotu Ullatthil Aerruk Kontaen Theyveega Amaithi Idhayatthil Thantheer Innum Ummai Thuthitthituvaen Sakalamum Seyya Vallavar Neerae Saarnthu Kontaen Ummaiyae Natappathu Ellaam Nanmaikkutthaanae Yesuvae Neer Pothumae