பாடல் #7230
அத்திமரம் துளிரற்றுப் போனாலும்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
அத்திமரம் துளிரற்றுப் போனாலும் ஆண்டவரே உம்மில் மகிழ்வேன் திராட்சைச் செடி பலனற்றுப் போனாலும் திவ்ய நேசரே உம்மை துதிப்பேன் ஆனந்த தைலத்தினால் என்னை அபிஷேகம் செய்தீரையா உள்ளம் நன்றியால் பொங்கிடுதே உந்தன் அன்பினால் மகிழ்ந்திடுதே பாடுவேன் சங்கீதங்கள் சர்வ வல்ல தேவன் உமக்கே பெலவீன நேரங்களில் - கர்த்தரே என் பெலனானீர் இருள் சூழ்ந்த நேரங்களில் கர்த்தரே என் ஒளியானீர் – பாடுவேன் எனக்காக யாவையுமே - என்றும் நன்மையாய் செய்திடுவீர் என்னில் அன்பு கூர்ந்ததினால் என்னைக் காத்துக்கொள்வீரைய்யா