பாடல் #7219
உம்மையே சுற்றி சுற்றி
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
உம்மையே சுற்றி சுற்றி வந்திடுவேன் என் உயிருள்ள நாளெல்லாம் பாடிடுவேன் இராஜா இராஜா என் இயேசு ராஜா என்னைத் தேடியே வந்த ராஜா ஆசையெல்லாம் நீர்தானையா - என் ஆதரவு நீர்தானையா என் தேடலும் நீர்தானையா என் பாடலும் நீர்தானையா நினைவெல்லாம் நீர்தானையா – என் கனவெல்லாம் நீர்தானையா என் பெலனும் நீர்தானையா என் சுகமும் நீர்தானையா உறைவிடமும் நீர்தானையா மறைவிடமும் நீர்தானையா ஆயுளெல்லாம் உம்மைத்தானே இராப்பகலாய் சுற்றி வருவேன்