பாடல் #7210
வெண்பனிபோல் என்னை சூழ்ந்து நிற்கும்
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
வெண்பனிபோல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவாவியானவரே பனித்துளிபோல் என்மேல் இறங்கும் தேவாவியானவரே வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிகள் நீங்கிட செய்தீர் பின்மாரி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே பரிசுத்த நதியே உம்மைப் பாடுகிறேன் உலர்ந்த எலும்புகளெல்லாம் உயிர்பெற்று எழும்புட வேண்டும் மாமிசமான யாவரின் மேலும் வல்லமையாக இறங்கிடுமே விண்ணக காற்றே விடுவிக்கும் காற்றே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக காற்றே பரிசுத்த காற்றே உம்மைப் பாடுகிறேன் உள்ளான வல்லமை பெருக எந்நாளும் ஆட்கொண்டு நடத்தும் நறுமணமாக நானிலமெங்கும் இயேசுவுக்காக பரவச்செய்யும் விண்ணக அன்பே விடுவிக்கும் அன்பே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக அன்பே பரிசுத்த அன்பே உம்மைப் பாடுகிறேன்